தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம்

Origin:

தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம் வளர்ந்து ஒரு ஆலமரம் போல வளர்ந்து ஆழமான வேர்களை எடுத்து மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும், அதன் சாதனைகள் பற்றிய அறிவை மக்களிடையே பரப்புவதற்கும் மற்றும் விழிப்புணர்வுக்கும், 20 மாநில கூட்டுறவு ஒன்றியங்கள் நம் நாட்டில் நிறுவப்பட்டன.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் அவற்றில் ஒன்றாகும். தற்போது 38 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் 4.1.1914 அன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் முதல் தலைவர் திரு.எம் ஆதிநாராயண அய்யா அவர்கள்.

முதல் தலைவர் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம்

திரு.ஆதிநாராயண அய்யா
(1914–1916)

Thiru Adhinarayana Ayya
திருவள்ளூர் மாவட்டம், கூட்டுறவு சங்கத்தின் நிறுவனத் தலைவர்

திருவள்ளூர் மாவட்டம்
(இந்தியாவில் முதலாவதாக துவங்கப்பட்ட கூட்டுறவு சங்கம்)

தலைமை கூட்டுறவு நிறுவனங்கள் - 17

  • தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம் வளர்ந்து ஒரு ஆலமரம் போல வளர்ந்து ஆழமான வேர்களை எடுத்து மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி கூட்டமைப்பு வாரியம்.
  • தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம வளர்ச்சி வங்கி.
  • தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம.்
  • தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகளின் இணையம்.
  • தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி.
  • தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்.
  • தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்.
  • தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம்.
  • தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதப்படுத்தும் ஆலை.
  • தமிழ்நாடு மாநில கூட்டுறவு சணல் விற்பனை இணையம்
  • தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் இணையம்
  • தமிழ்நாடு பனை பொருள் மற்றும் நார் விற்பனை கூட்டுறவு இணையம்
  • தமிழ்நாடு தொழில் கூட்டுறவு ரப்பரால் செய்யப்பட்ட சணல் பொருட்கள் (Rubberised Coir Products) சங்கம்
  • தமிழ்நாடு கூட்டுறவு நூற்பாலைகள் இணையம்.
  • தமிழ்நாடு மாநில கூட்டுறவு மீன்வள இணையம்
  • தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம்.

சட்டப்பூர்வ நிதிகள்

  • தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983 பிரிவு 72ன்படியும், விதிகள் எண்.90 மற்றும் 91ன் படியும் இலாபத்தில் இயங்குகின்ற கூட்டுறவுச் சங்கங்கள் இலாபப் பிரிவினையில் 3% கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியாகவும், 2% கூட்டுறவு கல்வி நிதியாகவும் மாவட்டத்தில் இயங்குகின்ற மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் வசூல் செய்யப்பட்டு மாநில கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிதிகள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மூலம் மேலாண்மை இயக்குநரை செயலாளராகக் கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிதிகளின் வசூல் தொகையில் 10% மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கும், 15% மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாகச் செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து நலிவடைந்த கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சி பணிகளுக்காக வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து காந்தி கிராம நிகர்நிலை பல்கலை கழகம், பாரதியார் பல்கலை கழகம் மற்றும் பெரியார் பல்கலை கழகங்களில் தலா 5 இலட்சம் இட்டு வைப்பு செய்து இருக்கை (Chair) ஏற்படுத்தி, இப்பல்கலைக் கழகங்களில் கூட்டுறவு ஆராய்ச்சி பட்டப்படிப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை (Scholarship) வழங்கப்பட்டு வருகிறது.
  • கூட்டுறவு கல்வி நிதியிலிருந்து கூட்டுறவு தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
  • அதன் ஒரு பகுதியாக ஒன்றிய அரசின் மூலம் நடத்தப்படும் மதுரையில் இயங்கும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு மொத்த செலவினத்தில் 50 சதவிகிதம் பொது அடிப்படை பயிற்சிக்காக (General Basic Course) கூட்டுறவு கல்வி நிதியிலிருந்து மானியமாக வழங்கப்பட்டு வருகிறது
  • ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் செயல்படும் இரண்டு கூட்டுறவு மேலாண்மை நிலையங்களுக்கு (சென்னை மற்றும் மதுரை) கூட்டுறவுச் சங்கங்களின் அலுவலர்கள்/பணியாளர்களுக்கு (Short Duration Course) குறுகியகாலப் பயிற்சி நடத்த 100 சதவிகிதம் மானியமாக கூட்டுறவு கல்வி நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி மற்றும் பயிற்சி

அனைத்து வகையான கூட்டுறவுச் சங்கங்களின் பணிகள், நடைமுறைகள், கூட்டுறவுச் சட்டம், விதிகள், கடமைகள், பொறுப்புகள் போன்றவற்றில் போதிய அளவிற்குப் பயிற்சிப் பெற்ற இளைஞர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடனும், தொடக்கக் கூட்டுறவுச் சங்கம் முதல் தலைமைக் கூட்டுறவுச் சங்கம் வரை நிர்வகிக்க அனைவரும் கூட்டுறவுப் பயிற்சி அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

மாநிலத்தில் மொத்தம் 27 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள், 7 துணைப்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும், புதுச்சேரியில் ஒரு கூட்டுறவு மேலாண்மை நிலையமும் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் அங்கமாக மாதவரம் ACSTIயில் ஒரு கூட்டுறவு மேலாண்மை நிலையமும் செயல்பட்டு வருகிறது.

  • கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் +2 முடித்த மாணவ/ மாணவியர்களுக்கு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி புதிய பாடத்திட்டத்தின்படி ஒராண்டுகால பயிற்சி இரண்டு பருவ முறைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
  • கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அஞ்சல்வழி மூலம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நடத்துதல்.
  • அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு குறுகியகாலப் பயிற்சி.
  • கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) பர்கூர் மற்றும் பட்டுகோட்டையில் செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் இலால்குடியில் ஒரு கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2022-23ம் கல்வி ஆண்டு முதல் மதுரை காமராஜர் பல்கலைக் கழக அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.
  • 2023-24-ஆம் ஆண்டு 23வது அஞ்சல்வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி புதிய பாடத்திட்டத்தின்படி பயிற்சி கடந்த 10.11.2023 முதல் பயிற்சியாளர்கள் இணையவழியில் விண்ணப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • நகை மதிப்பீடு மற்றும் அதன் நுட்பங்கள் குறித்த பகுதி நேரப் பாடமும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில், கூட்டுறவுத் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு பள்ளி இறுதித் தேர்வு (+2) முடித்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் 27 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள், 2 கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்கள், 1 பாலி டெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் 2022-23ம் ஆண்டு புதிய பாடத்திட்டக் குழு பரிந்துரைத்த பாடங்களுடன் 1 வருட பயிற்சியாக/ இரண்டு பருவங்கள் முறையில் (6 மாதங்கள்/ 5 பாடங்கள்) + (6 மாதங்கள்/5 பாடங்கள்) கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

கூட்டுறவு மேலாண்மை உயர் பட்டய பயிற்சி

புது தில்லியில் உள்ள தேசிய கூட்டுறவு பயிற்சிக் கழகத்தால், தமிழ்நாட்டில், சென்னை மற்றும் மதுரையில் இரண்டு கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் செயல்படுகின்றன

S. No. Name & Address of ICM
1 The Director
Natesan Institute of Coop. Management,
2377 A, Anna Nagar West, Shanthi Colony,
Anna Nagar, Chennai-600 040.
Ph.No.: 044 – 26221423
Email: Nicmchennai1954@gmail.com
2 The Director
Institute of Cooperative Management,
Chinnaudaippu Post,
Madurai – 625 022.
Ph.No.: 0452 – 2690055
Email: icmmadurai@gmail.com

கூட்டுறவு மேலாண்மை தொழிற்பயிற்சி நிலையங்கள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் 14.09.1992-இல் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரிலும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையிலும் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

S. No. District Name & Address of ITI
1 Thanjavur Principal(i/c)
Pattukkottai Coop. Industrial Training Institute,
Muthupet Road, Pattukkottai - 614 601.
Ph.No.: 04373-223806
Email: coopitipkt@gmail.com
2 Krishnagiri Principal(i/c)
Bargur Coop. Industrial Training Institute,
Madha Pallil, Bargur – 635 104, Krishnagiri District
Ph.No.: 04343-265652
Email: bargurciti@gmail.com

இந்நிலையங்களில் கீழ்காணும் பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகிறது:

  • மின்சாரப் பணியாளர்
  • ஆடை தயாரித்தல்
  • கணிப்பொறி (COPA)
  • சமையல் கலை கைவினைஞர் பயிற்சி (பொது)

கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்கள் (Approved by NCVT, New Delhi)

S. No Name of the Trade Eligibility / Duration No of Seats Sanctioned by NCVT for 2 ITIs
1 Electrician 10th Pass / 2 years 20 + 20
2 Computer Operator and Programming Assistant +2 Pass / 1 year 48 + 48
3 Food Production (General) 10th Pass / 1 year 48 + 48
4 Sewing Technology 10th Pass / 1 year 40 + 40
Total 156 + 156

குறிப்பு :2022-23 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் அறிவிப்பு எண்.2 இரண்டு கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணங்களை தள்ளுபடி செய்தல் (அரசாணை எண்.104, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்(சி.கே) துறை, நாள்-23.11.2021 . (13.07.2022 அன்று அரசிடமிருந்து பெறப்பட்ட தொகை ரூ.19,05,000/-.)

கூட்டுறவு பல்தொழில் நுட்ப பயிலக கல்லூரி

AICTE New Delhi-இன் அனுமதி பெறப்பட்டு திருச்சி மாவட்டம் இலால்குடியில் 10.09.2000 அன்று பல்தொழில் நுட்ப பயிலக கல்லூரி (Polytechnic) தொடங்கப்பட்டது.

S. No. District Name & Address
1 Tiruchirappalli The Principal,
Lalgudi Coop. Polytechnic College,
Ayyan Vaikkal Salai, Aankarai Village,
Lalgudi-621 703. Tiruchirappalli District
Ph.No: 0431-2543249
Email: 5651cpc@gmail.com

இக்கல்லூரியில் கீழ்க்கண்ட பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

  • கணினி பொறியியல் பட்டயம்
  • இயந்திர பொறியியல் பட்டயம்
  • மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டயம்

இலால்குடி பல்தொழில் நுட்ப பயிலக கல்லூரி

(Approved by AICTE, New Delhi and DOTE, Tamilnadu) 2022-23-ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விவரம்
Sl. No Branch Intake Seats (AICTE/Year) Fees Structure
(Per Candidate Per Annum) (Rs.)
1 Diploma in Mechanical Engineering 108 25,840
2 Diploma in Electrical Engineering 54 25,840
3 Diploma in Computer Engineering 30 14,940
Total 192

குறிப்பு : மேற்கூறிய பயிற்சிகளுக்கான கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / பயிற்சி காலம் 3 வருடங்கள்

ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் (Affiliation) இணைப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, 02.09.2022 அன்று மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் அவர்களால் துவங்கப்பட்டு, "ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி" துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
  • ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கு, பொதுப்பணித் துறையின் மூலம் ரூ.75.75 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான நிர்வாக அனுமதி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
  • 2022-23-ஆம் கல்வியாண்டிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக Affiliation ன்படி பட்டப்படிப்பு ஒன்றுக்கு அதிகபட்சம் 60 மாணவர்கள் வீதம் மொத்த பட்டப்படிப்புகளுக்கு 300 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • 2023-24-ஆம் கல்வியாண்டு முதல் கூடுதலாக 2 பட்டப்படிப்புகள் சேர்க்கப்பட்டு, அதிக பட்சம் மாணவர் சேர்க்கைக்கு ஒரு பட்டப்படிப்புக்கு 60 மாணவர்கள் வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 2024-25ஆம் கல்வியாண்டு முதல் கூடுதலாக 7 பட்டப்படிப்புகள் சேர்க்கப்பட்டு, அதிக பட்சம் மாணவர் சேர்க்கைக்கு ஒரு பட்டப்படிப்புக்கு 60 மாணவர்கள் வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

UG Course Details

  1. B.A. (History)
  2. B.A. (Cooperation)
  3. B.A. (Economics)
  4. B.A. (English)
  5. B.A. (Tamil)
  6. B.Com
  7. B.Com (Computer Applications)
  8. B.B.A (Bachelor of Business Administration)
  9. B.Sc. (Physics)
  10. B.Sc. (Chemistry)
  11. B.Sc. (Zoology)
  12. B.Sc. (Computer Science)
  13. B.Sc. (Information Technology)
  14. B.C.A (Bachelor of Computer Applications)

நோக்கங்கள் & பணிகள்

  • கூட்டுறவு இயக்கத்தினை மேம்படுத்துதல்
  • கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தல்.
  • கூட்டுறவு இயக்கம் தொடர்பான கூட்டம், கருத்தரங்கு, பட்டிமன்றம், மாநாடு, விவாதம், கலந்துரையாடல் போன்றவைகளை ஏற்பாடு செய்தல்.
  • தமிழிலும், ஆங்கிலத்திலும் பத்திரிகைகள் வெளியிடுதல் மூலம் பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளுதல்.
  • கூட்டுறவு இயக்கம் தொடர்பான சிறு கையேடுகள், கூ ட்டுறவு இயக்கப் புள்ளி விவரங்கள், தொலைபேசி கையேடுகள் போன்றவை வெளியிடுதல்.
  • கூட்டுறவு இயக்கத்தின் தகவல்கள் அளிக்கும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனமாக செயல்படுதல்.
  • கூட்டுறவு இயக்கத்தின் செயல்பாடுகளை திரைப்படங்கள்/வண்ண ஸ்லைடுகள் ஒளிப்பேழை, குறுந்தகடு மூலம் விளக்குதல்.
  • கூட்டுறவு இயக்கத் திட்டம், சாதனை மற்றும் கொள்கைகளை வண்ண சுவரொட்டிகள், ஸ்டிக்கர், விளம்பரப் பலகை மற்றும் ஒலிபெருக்கி மூலம் விளம்பரப்படுத்துதல்.
  • கூட்டுறவு இயக்கத்தின் சாதனைகளை விளக்கும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அரசு பொருட்காட்சிகளில் துறை சார்பாக அரங்கம் அமைத்தல்.
  • கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதிகளைப் பராமரித்தல்.

பிரச்சாரம் மற்றும் மக்கள் தொடர்பு

  • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம். அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களின் உதவியுடன் உறுப்னிர் கல்வித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன, அவை மாநிலத்தில் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
  • மாவட்ட அளவிலான அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்களின் சங்க உறுப்பினர்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உறுப்பினர் கல்வித் திட்டம் வழங்கப்படுகிறது.
  • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த “Catch them Young” என்ற “இளைஞர் ஈர்ப்பு முகாம்” திட்டம் நடத்தப்படுகிறது.
  • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம். புதுடெல்லியிலுள்ள தேசிய கூட்டுறவு ஒன்றியத்தின் வழிகாட்டுதலின்படி ஆண்டுதோறும் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நவம்பர் 14 முதல் நவம்பர் 20 வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
  • சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கப்படுகிறது.
  • இரத்ததான முகாம், கண்சிகிச்சை முகாம், மருத்துவ முகாம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.
  • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் அரசு கண்காட்சிகளில் கூட்டுறவு அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
  • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் துறை சார்பாக கலந்து கொள்கிறது.
  • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் NIC உதவியுடன் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது. வலைத்தள முகவரி - www.tncu.tn.gov.in.
  • ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு ஜனவரி 26 அன்று நடத்துகின்ற குடியரசு தின அலங்கார ஊர்தி அணி வகுப்பில், கூட்டுறவுத் துறையின் சார்பில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியமும் பங்கு கொண்டு வருகிறது. இந்த அலங்கார ஊர்தியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான அரசின் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு அலங்கார ஊர்தி அணி வகுப்பில் பங்கேற்கச் செய்து அரசின் திட்டங்கள் விளக்கப்படுகின்றது.
  • about.IndiaTourism
  • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் வழிகாட்டுதலுடன் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளூர் திருவிழாக்கள், கோடை விழா நேரத்தில் மாவட்டங்களில் சிறிய கண்காட்சிகளை நடத்துகின்றன, இக்கண்காட்சிகளில் கூட்டுறவு நிறுவனங்களின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டப்படுகின்றன.

வெளியீடுகள்

  • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் “கூட்டுறவு” என்ற தமிழ் மாத இதழ், தமிழ்நாடு ஜெர்னல் ஆப் கோவாப்பரேஷன்” என்ற ஆங்கில மாத இதழ் மற்றும் மாதமிருமுறை “கூட்டுறவு முரசு” என்ற தமிழ் இதழையும் வெளியிட்டு வருகிறது. கூட்டுறவு சமூகங்களின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினர்கள் மற்றும் மற்றும் பொது மக்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் கூட்டுறவு இயக்கத்தின் கொள்கைகளை இவ்விதழ்கள் மூலம் பரப்புகிறது.
  • இந்த பத்திரிகைகளில் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் கலந்து கொண்ட அரசு செயல்பாடுகள் குறித்த செய்திகளையும் கட்டுரைகளையும், அரசாங்கத் திட்டங்கள், சாதனைகள் வெளியிடப்படுகின்றன.
  • நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு மேலாண்மை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

நிர்வாகம்

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாகம் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளரால் நிர்வகிக்கப்படுகிறது. 11.04.2023 முதல், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் கூடுதல் பதிவாளர்/செயலாட்சியர் அவர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

உறுப்பினர்கள்

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கீழ் 38 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் 17 தலைமை கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-

S.No. District S.No. District S.No. District
1.Chennai14.Karur27.Tirunelveli
2.Kancheepuram15.Perambalur28.Thoothukudi
3.Tiruvallur16.Tiruchy29.Kanniyakumari
4.Vellore17.Puthukottai30.Ariyalur
5.Cuddalore18.Thanjavur31.Tiruppur
6.Tiruvannamalai19.Tiruvarur32.Chengalpet
7.Vilupuram20.Nagapattinam33.Kirishnagiri
8.Salem21.Dindigul34.Thenkasi
9.Namakkal22.Madurai35.Tirupathur
10.Dharmapuri23.Theni36.Ranipettai
11.Erode24.Ramanathapuram37.Kallakurirchi
12.Coimbatore25.Virudhunagar38.Myladuthurai
13.Nilgiris26.Sivagangai